ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு துவக்கம்

செய்துங்கநல்லூர்: தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்.26ம் தேதி ஆதிச்சநல்லூர், சிவகளையில் 2ம் கட்ட அகழாய்வும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் தொடங்கியது. கொரோனா தொற்றின் 2ம் அலை தீவிரமடைந்ததால் அகழாய்வு பணிகள் மே 10 முதல்  நிறுத்தப்பட்டது.  ஒரு மாதத்திற்கு பின் நேற்று ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவங்கியது.  முதல் கட்டமாக அகழாய்வு செய்யப்படும் இடங்கள், குழிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் மாநில அரசு அகழாய்வு செய்ய செப்டம்பர் மாதம் வரைதான் அனுமதி கொடுத்துள்ளது. இதனால் தொல்லியல் அதிகாரிகள் வேலைகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளனர்….

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை