ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் இலவச வெள்ளாடுகள்: கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், புதுசத்திரம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வெள்ளாடுகள் வழங்கி தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு தலா ரூ.19,040 வீதம் ரூ.19 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அ.வெங்கடரமணன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயஸ்ரீ மகா, ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்தபாபு, சி.அண்ணாகுமார், நேமம் என்.எஸ்.ஜெ.பிரேம்நாத், கு.தமிழ்செல்வி, நிறைமதி தங்கராஜ், திமுக நிர்வாகிகள் கட்டதொட்டி எம்.குணசேகர், பா.கந்தன், ஜி.சி.சி.கருணாநிதி, கே.சுரேஷ்குமார், எம்.இளையன், குணசேகரன், பி.சி.மூர்த்தி, வாசுகி எட்வின், ஜி.சுகுமார், ஜி.பி.பரணிதரன், பிரவின்குமார், பிரதீப், ராஜேஷ், உதயா, கால்நடை உதவி மருத்துவர்கள் முபாரக், லோகவானி, சாந்தி, நாகபூஷணம் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை உதவி மருத்துவர் வி.பிரசாத் நன்றி கூறினார்….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு