ஆண்டாள் கோயில் யானை குளிக்க புதிதாக நீச்சல் குளம்: ரூ.11 லட்சம் செலவில் அமைப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், யானை குஷியாக குளித்து மகிழ்கிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜெயமால்யதா என்னும் 19 வயது யானை உள்ளது. இது குளித்து மகிழ ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் யானை ஜெயமால்யதா தினசரி குளித்து மகிழ்கிறது. குளத்தில் யானை இறங்கியவுடன் அங்கும், இங்கும் ஆர்வமாக செல்கிறது. யானை பாகன்கள் கூறுகையில், ‘‘புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் யானை தினசரி குளித்து மகிழ்கிறது. குளத்தில் இறங்கியவுடன் சிறு குழந்தை போல அங்கும், இங்கும் சென்று தண்ணீரை துதிக்கையால் வாரி இரைத்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறது’’ என்றனர். …

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு