ஆட்டோ மீது மோதிய அரசு பஸ் 45 பயணிகள் உயிர் தப்பினர்

 

ராமநாதபுரம், ஜூன் 12: ராமநாதபுரம் அருகே ஆட்டோ மற்றும் மின் கம்பத்தின் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 45 பயணிகள் உயிர்தப்பினர். ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று முன்தினம் ஆற்றங்கரை வழியாக பனைக்குளம் நோக்கி சென்றது. இந்த பஸ்ஸில் 45 பயணிகள் சென்றனர். ராமநாதபுரம் அருகே நதி பாலம் வளைவில் பஸ் வந்தபோது, அந்த பகுதியில் எதிரே ஆட்டோ ஒன்று வந்தது. எதிரே பஸ் வருவது கண்ட ஆட்டோ டிரைவர் கீழே குதித்தார்.

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பஸ்ஸின் அடியில் சென்று அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தின் போது பஸ் எதிரிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதால் மின்கம்பம் முறிந்து மின் கம்பிகளும் பஸ் மீது அறுந்து விழுந்தது. அந்த நேரத்தில் மின்விநியோகம் இல்லாததால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. பஸ்ஸில் இருந்த 45 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தேவிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், இச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்