ஆடை அணிவது அவரவர் உரிமை: நடிகை ரோகிணி பேச்சு

சென்னை: ஆடை என்பது அவரவர் உரிமை சார்ந்த பிரச்னை. அதை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என நடிகை ரோகிணி கூறினார். சென்னை மாநகராட்சியின் அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட 98வது வட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி அயனாவரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர்,  நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வேட்பாளர் இளம் வயதில் மக்களுக்கு பணி செய்ய முன்வந்துள்ளார். ஆடை என்பது அவரவர் உரிமை சார்ந்த பிரச்னை. அதை தடை செய்ய பிறருக்கு உரிமையில்லை. கர்நாடகாவில் மாணவிகள் புர்கா அணிவது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். அதை தொடருவதில் என்ன சிக்கல். யாரையும் கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்யக்கூடாது. தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் எதுவும் நடக்கவில்லை.இவ்வாறு அவர்  கூறினார்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…