ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம், ஜூலை 22: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
ஆடி மாதம் முதல் வெள்ளிக் வெள்ளி கிழமையை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வாராஹிஅம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வாராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகம் நடந்தப்பட்டது. அதனை தொடர்ந்து பெண்கள் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாற்றியும், வெண்பூசணி, தேங்காய், எலுமிச்சை, நெய், பச்சரிசி மாவு ஆகியவற்றை கொண்டு விளக்கேற்றியும் வழிபட்டனர்.

ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவிலுள்ள ராஜமாரியம்மனுக்கு 21 அபிஷேகங்கள் செய்யப்பட்டு 108 கிலோ மல்லிகை பூ அபிஷேகம் நடந்தது. ரயில்வே சாலையிலுள்ள வெட்காளியம்மன், கலெக்டர் அலுவலக பகுதியிலுள்ள பிள்ளைகாளியம்மன் உள்ளிட்ட அம்மன்கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் அரியநாயகிஅம்மன். கடலாடியிலுள்ள பாதாளகாளியம்மன், ராஜராஜேஸ்வரிஅம்மன், பத்திரகாளியம்மன், காமாட்சியம்மன், சந்தனமாரியம்மன், சமத்துவபுரம் வனப்பேச்சியம்மன், காணீக்கூர் பாதாளகாளியம்மன், புனவாசல் பொன்னந்திகாளியம்மன், உய்வந்தம்மன் ஆகிய கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.

இதனை போன்று முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லியம்மன், வடக்கூர் வழிவிடுமுருகன் கோயிலுள்ள துர்க்கை அம்மன், பேரையூர் அருகே கருங்குளம் முத்துமாரியம்மன் ஆகிய கிராம புற கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவரான அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தது. அனைத்து அம்மன் கோயில்களிலும் பொதுமக்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை