ஆடி மாத வார விடுமுறை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

 

மதுரை, ஜூலை 31: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு குவிந்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்களில் மூலவரான அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது தொடர்கிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் கோயில்களில் வெள்ளி செவ்வாய் கிழமைகள் மட்டுமின்றி தினந்தோறும் அலைமோதி வருகிறது.

இதேபோல், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கின்றனர். ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் வருகை தருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய குவிந்து வருவதால் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது.

இதன்படி நேற்று வார விடுமுறையை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. குடும்பம் குடும்பமாக மக்கள் கூடி வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இதேபோல் சித்திரை வீதியில் உள்ள 18ம் படி கருப்பசாமி, முனீஸ்வரர் கோயில் உள்ளிட்டவற்றிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். பக்தர்கள் வருகையால் அப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரமும் சிறப்பாக இருந்தது.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை