அவ்வை சண்முகம் சாலையில் திடீர் பள்ளம்-விபத்து ஏற்படுவதற்கு முன்பு சரிசெய்ய கோரிக்கை

நாகர்கோவில் : நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் மணியடிச்சான் கோயில் ஜங்ஷன் பகுதியில் சாலையின் நடுவே போட்டுள்ள மேன்ஹோல் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்ைல. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் மரதுண்டு மற்றும் மரக்கிளைகளை வைத்துள்ளனர். அவ்வைசண்முகம் சாலையில் குறிப்பாக மீனாட்சிபுரம் பகுதியில் நகை கடைகள், ஜவுளிகடைகள் உள்பட பல வணிக நிறுவனங்கள் அதிக அளவு உள்ளன. தீபாவளி நெருங்குவதையொட்டி பொதுமக்கள் அதிக அளவு ஜவுளிகடைக்கு துணி எடுப்பதற்கு வருவார்கள். இதனால் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படுவதற்கு முன்பே இந்த பள்ளத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பொறியியல் படிப்பில் கூடுதலாக 15000 பேர் சேர்ந்தனர்: அமைச்சர் பொன்முடி