அழகப்பபுரத்தில் ₹3.10 லட்சத்தில் புதிய பாலம்

அஞ்சுகிராமம்,அக்.12: அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 6வது வார்டு தச்சுகொல்லு பட்டறையில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் இணைப்பு பகுதியில் உள்ள பாலம் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதிய பாலம் கட்டித்தருமாறு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பாலம் கட்ட ரூ.3.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. பேரூராட்சி தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, காங்கிரஸ் தலைவர் கால பெருமாள், கவுன்சிலர்கள் பிரகாஷ், ஜார்ஜ் மலர்கொடி, கிறிஸ்டி உள்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related posts

வங்கி ஊழியருக்கு வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி ₹5.72 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி

10 யூனிட் மணல் லாரியுடன் பறிமுதல் திருவண்ணாமலையை சேர்ந்தவர் உட்பட 2 பேர் கைது ஆந்திராவில் இருந்து கடத்தல்

விளை நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே நள்ளிரவில்