அறுவடைக்கு பின் சேமித்து வைக்கப்படும் பயறு வகை தானியங்களில் பூச்சி தாக்கம் வராமல் தடுக்க நடவடிக்கை

தோகைமலை: கரூர் மாவட்டம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில், விவசாயிகள் சாகுபடி செய்யும் தானியங்களை, அறுவடை செய்த பின்பு சேமித்து வைக்கப்படும் பயறு வகை தானியங்களில், பூச்சி தாக்கம் வராமல் இருக்க, தொழில்நுட்ப ஆலோசனைகள் கொண்ட வளல்வெளி தினம் நிகழ்ச்சி நடந்தது. தரகம்பட்டி அருகே உள்ள மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டியை சேர்ந்த முன்னோடி விவசாயி மருதமுத்து சேமிப்பு கிடங்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் தலைமையில் வயல்வெளி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வசம்பு கரைசல் மற்றும் அறுவடைக்கு பின்பு சார் சேமிப்பு பைகள் பயன்படுத்துதல் என்று இரண்டு தொழில்நுட்பங்களை கொண்டு வயல்வெளி ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வுக்காக முன்னோடி விவசாயி மருதமுத்துவின் வயலில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயறு அறுவடை செய்த பின்பு, நன்றாக வெயிலில் உலர்த்தி அதனை சுத்தம் செய்தனர். பின்பு அந்த உளுந்து விதைகளில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வசம்பு கரைசலை கலந்து, சுத்தமான பைகளில் ஆய்விற்காக 4 மாதங்கள் வரை சேமித்து வைக்கப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி