சேலம், டிச.25: சேலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட 16வது மாநாடு நேற்று நடந்தது. கிளை தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயமுருகன், ஷாஹீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ஆனந்த்குமார் வரவேற்றார். இதில், மாநில செயலாளர் சேதுராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சமூக மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து மாவட்ட பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் கண்ணன், துணை தலைவர் சத்தியமூர்த்தி, கிளை பொருளாளர் ஜடா பிரிஸில்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.