அறியலாம் ஆப்ஸ்

பீரியட் டிராக்கர்! அவசர உலகம், சாப்பாடு, தூக்கம் என எதிலும் ஒரு சீரான நேரம் காலம் கடைப்பிடிக்க முடியாத நிலை என சுழன்றுக் கொண்டிருக்கும் உலகில் அதிகம் பாதிப்புகளைச் சந்திப்பது வேலைக்குச் செல்லும் பெண்கள்தான். குறிப்பாக அவர்கள் வேலை, வீட்டு பராமரிப்பு, குழந்தைகள் என தங்களைக் கூட பார்த்துக் கொள்ள முடியாத சூழலில் உள்ளனர். குறிப்பாக சில பெண்கள் தங்களின் மாதவிடாய் நாட்களைக் கூட சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகிவருகிறது. அதிலும் மாதந்தோறும் சரியான கால இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி இல்லையெனில் இன்னமும் சிக்கல். அதை ஞாபகம் வைத்துக்கொண்டாலும் நோ யூஸ் என்னும் நிலைதான். இதற்குதான் தீர்வாக உள்ளது ’பீரியட் டிராக்கர்’ (Period Tracker) மொபைல் செயலி. GP International LLC நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த ஆப் மாதவிடாய் சுழற்சியை சரியாக நோட்டிபிகேஷன்கள் மூலம் தெரிவிப்பதோடு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் மனநிலை, வலிகள், உடல் மாற்றங்கள் என அனைத்தையும் குறிப்பிட்டால் தக்க தீர்வும் கொடுக்கிறது. போலவே முந்தைய சுழற்சியில் நாம் ஏதேனும் உடல் அறிகுறிகள் குறிப்பிட்டிருந்தால் அதனையும் சுட்டிக் காட்டி, இந்த மாதம் அதே அறிகுறிகள் அல்லது வலிகள் உள்ளனவா என்னும் கேள்வியுடன் அதற்கும் மருத்துவர்கள் உதவியுடன் டிப்ஸ் மற்றும் மருத்துவ உதவிகளும் கொடுக்கிறது.ஆஹா வேப்பம்பூ!நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூ ரசம் நல்ல பலன் தரும். வேப்பம்பூ 50 கிராம். அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம்பூ சேர்த்த எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால் உடல் பளபளப்பாக மாறும். நல்லெண்ணெய் வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும். தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோல் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.- கவிதா பாலாஜிகணேஷ்…

Related posts

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!

ஆரோக்கியம் அள்ளிக் கொடுக்கும் ABC ஜூஸ்!