அறப்போர் இயக்கம் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

சென்னை: அறப்போர் இயக்கம் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்தது. 1500 கோடி ரேஷன் பொருட்கள் ஊழல் நடந்ததாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து முகநூலில் காவல்துறை ஆணையருக்கு எதிராக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்  கருத்து வெளியிட்டதாக அவர் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு ஜெயராம் வெங்கடேசன்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் ஜெயராம் வெங்கடேசனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு  தடை விதித்து உத்தரவிட்டார்….

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு