அறநிலையத்துறையில் பணிபுரியும் அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனஸ்: கமிஷனர் உத்தரவு

சென்னை: அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020-ம் ஆண்டின் 240 நாட்கள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ.1,000 வழங்கவும், அதற்கு குறைவாக பணிபுரிந்தோருக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை மற்றும் முதுநிலையில்லாத அனைத்து திருக்கோயில் பணியாளர்கள் உட்பட அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் ரூ.1,000 வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறையில் பணிபுரியும் 30 ஆயிரம் கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க கமிஷனர் டாக்டர்.சு.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இதில், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், உதவியாளர்,  மேலாளர், அர்ச்சனை சீட்டு வழங்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். …

Related posts

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு: டிசம்பர் 31ம் தேதி வரை பராமரிப்பு மற்றும் கண்காணிக்க திட்டம்

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலத்தை கடித்து குதறிய தெருநாய்கள்