அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. 3,700 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

நெல்லை: நெல்லையப்பர் கோவில் தேருக்கு கண்ணாடி தகடு அமைப்பது தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கடந்த ஆட்சியில் திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட தமிழகத்தில் உள்ள 11 திருமேனி பாதுகாப்பு மையங்களிலும் காவலர்கள் நியமிப்பதில் இருந்த சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஒரு மாதத்தில் திருமேனி பாதுகாப்பு மையங்கள் செயல்படும். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. 3,700 கோடி அளவிலான சொத்துக்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் கடந்த 8 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்த அம்பாள் சன்னதி மேற்கு பிரகாரம், கரு உருமாரி தெப்பம் மற்றும் அம்பாள் சன்னதி மேல் கூரை ஓடு அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு, டி.வி.எஸ். நிறுவனத்தின் உபயத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் இந்த பணிகள் நிறைவு  பெரும். அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள வாகனங்கள் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறநிலைத்துறைக்கு சொந்தமான கல்லூரிகள் தற்காலிகமாக 4 இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள கல்லூரிகளுக்கான அனுமதி வழங்குவது தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவு பெற்றபின் செயல்பாட்டுக்கு வரும். நெல்லையப்பர் கோவில் தேருக்கு கண்ணாடி தகடு அமைப்பது தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்த மானிய கோரிக்கையில் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். …

Related posts

ஆசிரியர்களின் மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாமல் வழங்குக: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்து 12 பேர் காயம்

திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி