அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?: காத்திருக்கும் இந்தியா

ஹாமில்டன்: நியூசிலாந்தில் நடக்கும் ஐசிசி மகளிர் உலக கோப்பை லீக் சுற்று ஆட்டங்கள் மார்ச் 27ம் தேதியுடன் முடிகிறது. அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.ஆஸி 6 ஆட்டங்களிலும் வென்று  12 புளளிகளுடன், முதல் அணியாகவும்,  தென் ஆப்ரிக்கா 9 புள்ளிகளுடன் 2வது அணியாகவும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை முதல் அணியாக இழந்துள்ளது. பட்டியலில்  ஒரு வெற்றியுடன் 7வது இடத்தில் இருக்கும் வங்கதேசமும் அதே நிலையில்தான் உளளது. கூடவே போட்டியை நடத்தும் நியூசிலாந்து,  தனது கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்றாலும்  அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அரிதுதான்.பாகிஸ்தானை நேற்று வென்ற இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்குமுன்னேறியுள்ளது. அடுத்து வங்கதேசத்தை  வென்றால் 8 புள்ளியுடன் அரையிறுதியை எளிதில் உறுதி செய்யும். வெஸ்ட் இண்டீஸ்தான் முதல் அணியாக 7 ஆட்டங்களிலும் விளையாடி 7 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  இந்தியா, இங்கிலாந்து அணிகளில் ஏதாவது ஒன்று அடுத்த ஆட்டத்தில் தோற்றால் வெ.இண்டீஸ் அரையிறுதியில் விளையாடும்.இந்தியா. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 6 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் இந்தியாவும் அரையிறுதியை உறுதி செய்யும்.  அதற்கான வாய்ப்பு அதிகம். காரணம், உலக கோப்பைக்கு முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை  வீழ்த்தியுள்ளது….

Related posts

சில்லிபாயின்ட்…

வங்கத்தின் வேகத்தில் சரிந்த இந்தியா அஸ்வின் அதிரடியால் நிமிர்ந்தது: கை கொடுத்த ஜடேஜா, ஜெய்ஸ்வால்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா