அரூரில் சரக டிஐஜி ஆய்வு

அரூர், நவ.18: சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, அரூர் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சட்டம், ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கைகள் குறித்தும் பழங்குற்றவாளிகள், ரவுடிகள் பற்றியும் விசாரணை செய்தார். காவல்துறை சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர் ஆகிய இடங்களில் சிறுவர் மன்றங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஆய்வின் போது டிஎஸ்பி ஜெகநாதன், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர் பாபு, சரவணன், லதா, நாகலட்சுமி, வான்மதி, செந்தில்குமார் மற்றும் அரூர் கோட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், காவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை