அரியலூர் மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள்

 

அரியலூர், மே 30: அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுதுறையின்கீழ் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டம் (PACCS as MSC) மற்றும் SMAM திட்டத்தின்கீழ் டிராக்டர், ரொட்டவேட்டர், கலப்பைகள், பவர் டில்லர், விதைப்பு கருவிகள் மற்றும் வைக்கோல் சுருட்டும் இயந்திரம் உள்ளிட்ட 34 வேளாண் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 31 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, அருகிலுள்ள கூட்டுறவு சங்கங்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்