அரியலூர் நகரில் கோடைமழை

 

அரியலூர், ஜூன் 8: அரியலூரில் நேற்றும் கோடைமழை பெய்தது. தொடர்மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் கோடைமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் மாலை, இரவு நேரத்தில் மழை பெய்கிறது- அரியலூர் மாவட்டம் முழுவதும், இடைவிடாத மழை நேற்று பெய்தது. இரவு பெய்த மழையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று இரவு 8.30 முதல் நள்ளிரவு வரை பெய்த மழையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடிக்கால் வசதிகள் இல்லாததால் மழை நீர் தேங்கியுள்ளது. அரியலூர் புதுமார்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்திசந்தை, வெள்ளாளத்தெரு,செந்துறை சாலை, பெரம்பலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்