அரிசி சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம், : வேடபாளையத்தில் உள்ள அரிசி சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளின் நெல் மூட்டைகள், உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்படுகிறது.இதனை நவீன அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, மீண்டும் அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளுக்கு அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் நியாய விலை கடைகளுக்கு வேடப்பாளையத்தில் இருந்து அனுப்புவது வழக்கம்.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தரமற்ற அரிசிகள் நியாய விலை கடைகளில் வழங்குவதாக முதல்வரிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு குழுவினர், அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரத்தினை உறுதி செய்து, அந்தந்த நியாய விலை கடைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வேடபாளையம் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறப்பு குழுவினரிடம் முறையாக ஆய்வு செய்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்ததார்….

Related posts

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்

சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை