அரிசி கொழுக்கட்டை

எப்படிச் செய்வது?அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து
உலர்த்தி மாவாக அரைக்கவும். இந்த மாவை வெள்ளைத் துணியில் போட்டு ஆவியில் 10
நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். வெறும் கடாயில் வேர்க்கடலையை வறுத்து
ஆறியதும் பொடி செய்து தனியே வைக்கவும். அதே கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு
தேங்காய்த்துருவலை வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை பொடி,
தேங்காய்த்துருவல், வெல்லப்பொடி அனைத்தையும் கலந்து கொள்ளவும். பூரணம்
ரெடி. வெந்த மாவில் உப்பு, தண்ணீர், 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து
சிறு சிறு உருண்டைகள் செய்து, வட்டமாக தட்டி 1 டீஸ்பூன் பூரணத்தை அதில்
வைத்து மடித்து கொழுக்கட்டை செய்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

Related posts

முள்ளு கத்தரிக்காய் துவையல்

பலாக்கொட்டை துவையல்

வாழைக்காய் தேன்குழல்