அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் முருங்கைக்காய் சீசனுக்காக பூத்துக்குலுங்கும் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் முருங்கை காய் சீசனுக்காக மரங்களில் முருங்கை பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. அரவக்குறிச்சி பகுதியில் ஆலமரத்துப்பட்டி, ஈசநத்தம், கோவிலூர், சாந்தப்பாடி, நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கைக்காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், அண்மை மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்க்கு தனி சிறப்பு உள்ளது.ஆகையால் மலைக்கோவிலூர், ஈசாநத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் தொடர் மழையின் காரணமாக சென்ற மாதங்களில் முருங்கை பூக்கள் உதிர்ந்த நிலையில் தற்போது வரும் ஜூன் மாத சீசனுக்காக,முருங்கை சீசனுக்காக,மரங்களில் முருங்கை பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. இதனால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு