அரசு விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய  விளையாட்டு விடுதிகள், பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன.மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்பட பல இடங்களிலும், மாணவிகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, சென்னை உப்ட பல இடங்களில் செயல்படுகின்றன. மேற்கண்ட விளையாட்டு விடுதிகளில்  பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்க 7, 8, 9,  11ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 24ம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. அதில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, பளூதூக்குதல், டென்னிஸ், கபடி உள்பட பல்வேறு விளையாட்டுகள் மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.    செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள்  www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் படிவத்தினை  பூர்த்தி செய்யலாம். படிவத்தினை (online registration) பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் வரும் 22ம் தேதி மாலை 4 மணி . மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு,  இளைஞர் நலன் அலுவலரை 7401703481  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ….

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்; 600 விசைப்படகுகள் கரை நிறுத்தம்

ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

3 சட்டங்களை ஆராய நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு