அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து கருத்தரங்கம்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் சூனாம்பேடு அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் பேரவை சார்பில், மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வழிகாட்டும் கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் பள்ளி மாணவர் பேரவை நிர்வாகி சூ.க.விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். ரா.கோபுராஜ் வரவேற்றார். ஆசிரியர் பழனிவேலன், சூ.க.ஆதவன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சித் தமிழ் ஐஐஎஸ் அகாடமி இயக்குனர் வீரபாபு கலந்து கொண்டு, வேலைவாய்ப்பு, அறிவுத்திறன், அரசு பொதுத்தேர்வு, டிஎன்பிஎஸ்சி ஆகிய தேர்வுகளை மாணவர்கள் திறமையுடன் எதிர்கொள்வது குறித்து எடுத்துரைத்தார். மேலும், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஓய்வுபெற்ற தமிழ்நாடு அரசு தொழில் வணிக துறை இணை இயக்குனர் ராஜகணேஷ், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், சித்தாமூர் ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை, பேரவை நிர்வாகிகள் லில்லிசுசேதா, பெரியசாமி, ஹேமாமாலினி உள்பட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். …

Related posts

ஆன்லைன் ரம்மி விசைத்தறி அதிபர் தற்கொலை

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு: கரூரில் சிபிசிஐடி அதிரடி

வேறொருவருடன் நாளை மறுதினம் திருமணம் வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனை கரம் பிடித்த பெண்