அரசு மருந்தாளுநர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

 

மதுரை, அக். 25: தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் சு.பாண்டியன் அறிவுடைநம்பி விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் காலியாக உள்ள சுமார் 986 மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசாணை 131ன்படி மருந்தாளுநர்களுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும்.

காலியாக உள்ள தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் அதிகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மருந்தாளுநர் பணியிடங்களும் அதிகளவில் தேவைப்படுகிறது.

எனவே காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். மக்களை தேடி மருத்துவம் போன்ற சிறப்பு நலத்திட்டங்களில் மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை