அரசு மருத்துவ கல்லூரிக்கு ரூ.7 லட்சத்தில் ரத்த கூறுகளை சேமிக்கும் உறைவிப்பான்: கலெக்டர் திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்ததான மையத்தை திருவள்ளூரில் உள்ள தனியார் அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல் பராமரித்து வருகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ரத்ததான மையத்தினை ரூ.75 லட்சத்தில் பராமரிப்பு பணியினை மேற்கொண்டும், அதற்காக தேவைப்படும் உபகரணங்களை வழங்கவும் அந்த அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை தொடர்ந்து தனியார் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனையில் ரத்தக் கூறுகளை சேமிக்கப் பயன்படுத்தப்படும் மைனஸ் 80 டிகிரி கொண்ட உறைவிப்பானை வழங்கும் விழா நடந்தது. தனியார் அமைப்பு தலைவர் டாக்டர் என்.அபர்ணா தலைமை வகித்தார். செயலாளர் ஏ.கே.மதிவாணன், பொருளாளர் எம்.துக்காராம், சமூக சுகாதார தலைவர் கே.வி.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறைவிப்பானை திறந்து வைத்தார். இதில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் அரசி ஸ்ரீவத்சன், சங்கப் பயிற்சியாளர் ஆர்.விஜயநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

செட்டிகுளம் முருகன் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா கோலாகலம்: வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் தரிசனம்

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அரசாணை

சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்