அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகம்

போச்சம்பள்ளி, ஜூன் 14: போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளன்றே மாணவிகள், உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். புதியதாக சேர்ந்த மாணவிகளுக்கு, தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமையில் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் காளியம்மாள், சிவலிங்கம், பழனி, முருகன், சேகர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை