அரசு பேருந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

விக்கிரவாண்டி, மே 8: விக்கிரவாண்டி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயமடைந்தனர். காரைக்குடியில் இருந்து அரசு விரைவு பேருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி புறப்பட்டது. அதிகாலை நான்கு மணிக்கு விக்கிரவாண்டி அருகே பனையபுரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் ஸ்டேரிங் லாக் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் வேறு வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்குள்ளானவர்களை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து கிரேன் உதவியோடு போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’