அரசு பஸ்சில் இருந்து மீன் வியாபாரியை இறக்கி விட்ட நடத்துனர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

குளச்சல்:குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த பெண் செல்வம் (70). மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலையில் தலை சுமட்டில் மீன்களை சுமந்து குளச்சல் பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்வது வழக்கம்.  வழக்கம் போல் நேற்று முன்தினம் செல்வம் மீன்களை விற்பனை செய்து விட்டு, இரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் வாணியக்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டர், மீன் நாற்றம் வீசுவதாக கூறி செல்வத்தை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொது மக்களிடம் கொட்டி தீர்த்தார். ஆனால் கண்டக்டரோ இதனை கண்டு கொள்ளவில்லை. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் அரசு பஸ் நடத்துனர் மணிகண்டன், டிரைவர் மைக்கேல், குளச்சல் பஸ்நிலைய டைம் கீப்பர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் சஸ்பென்ட் செய்து குமரி மாவட்ட போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார். எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளம் வேண்டும்: மு.க.ஸ்டாலின்குமரியில் பேருந்தில் இருந்து மீன் விற்பனை செய்யும் பெண்ணை இறக்கிவிட்ட பேருந்து நடத்துநரின் செயல் கண்டிக்கத்தக்கது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:  குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாக கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில் ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்….

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி