அரசு பஸ்சின் கண்ணாடி உடைப்பு வேலூர் சேண்பாக்கத்தில்

வேலூர், ஆக.15: வேலூர் சேண்பாக்கத்தில் டெப்போவுக்கு சென்ற அரசு பஸ்சின் கண்ணாடி உடைத்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் அரசு பஸ், நேற்று காலை 5.30 மணியளவில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு, வேலூர் கொணவட்டம் பஸ் டெப்போவுக்கு சென்றது. இந்த பஸ்சை டிரைவர் ராமச்சந்திரன் ஓட்டிச்சென்றார். சேண்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, டிரைவர் ராமச்சந்திரன், இன்டிகேட்டர் இல்லாமல் பஸ்சை திருப்பி உள்ளார். அப்போது, வழியாக பைக்கில் வந்த நபர் பஸ்சில் மோதி விபத்துக்குள்ளானார்.

அப்போது எந்த சிக்னலும் காட்டாமல் பஸ்சை திருப்பவதாக என பைக்கில் வந்த வாலிபர், டிரைவர் ராமச்சந்திரனிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர், அங்கிருந்த கற்களை பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது வீசிவிட்டு, அந்த வாலிபர் அங்கிருந்து பைக்கில் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பஸ் கண்ணாடி உடைப்பு குறித்து டிரைவர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்