அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.17.5 லட்சம் ஊக்கத்தொகை: அமைச்சர், எம்எல்ஏ வழங்கினர்

அம்பத்தூர்: வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் நகரில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில், ரூ.17.5 லட்சம் மதிப்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, கல்வி உபகரணங்கள்  வழங்குதல் மற்றும் பள்ளி மறு சீரமைப்பு  நிகழ்ச்சி நேற்று நடந்தது. அண்ணாநகர் மண்டல குழு தலைவர் கூ.பி. ஜெயின்   வரவேற்றார். வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன்  தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கினார். மேலும் 15 அதிநவீன ஆக்சிஜன் செறிவுட்டும் கருவி, 10 இரும்பு பெரிய குப்பைத்தொட்டி சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி கட்டிடத்தில் வண்ணம் பூசி பள்ளி மறு சீரமைப்பு பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 95வது மாமன்ற உறுப்பினர் சுதா தீனதயாளன் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளர் வாசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திமுக நிர்வாகிகள்  என பலர் கலந்து கொண்டனர்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு