அரசு பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

 

பெரம்பலூர், ஜன.13: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வி.களத்தூரிலுள்ள ஆண்கள் ஊ.ஒ.தொ. பள்ளியில் பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் அதே வளாகத்தில் எதிரேயுள்ள வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளியின் மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு ஆண்கள் ஊ.ஒ.தொடக்க பள்ளித் தலைமை ஆசிரியர் மரியஜோசப் தலைமை வகித்தார்.

பெண்கள் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகாயமேரி முன்னிலை வகித்தார். விழாவில் உதவி ஆசிரியர்கள், கண்ணன், லெட்சுமி, அருள்ஜோதி, அம்சவள்ளி, அரங்கநாதன், எழிலரசன், சத்துணவு அமைப்பாளர் இந்திராணி, காலை உணவு அமைப்பாளர், ராதா, ரஞ்சிதா, பள்ளி மேலாமைக்குழு தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பு செய்தனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை