அரசு பள்ளியில் ஆண்டு விழா

தேன்கனிக்கோட்டை, மார்ச் 14: தளி ஒன்றியம், வரதேகவுண்டன்தொட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பால்ராஜ், விஜய் கருணாகரன், ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்று பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத்துலைவர், ஊராட்சி தலைவர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி, புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’