தேன்கனிக்கோட்டை, ஆக.1: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள டி.கொத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு, தேன்கனிக்கோட்டை கனரா வங்கி சார்பில் ₹40 ஆயிரம் கல்வி உதவி தொகை மற்றும் பள்ளிக்கு ₹60 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது. அதே போல், முன்னாள் மாணவர் வேணுகோபால், ஒரு ஸ்மார்ட் போர்டை வழங்கினார். விழாவில், கனரா வங்கி கிளை மேலாளர் சுவாதி மற்றும் வங்கி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் முனிரெட்டி, ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.