அரசு நிலமோசடி வழக்கில் ஓபிஎஸ் உதவியாளர் உட்பட 3 பேருக்கு காவல் நீட்டிப்பு

தேனி: தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலம், பெரியகுளம் தெற்கு ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளருமான அன்னப்பிரகாஷ் உள்ளிட்டோருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு தேனி மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த மாதம் சிபிசிஐடி போலீசார், அன்னப்பிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அதிகாரிகளின் உதவியாளர் அழகர்சாமி ஆகியோரை கைது செய்தனர். இம்மூவருக்கும் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, நேற்று தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதின்றத்தில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சுந்தரம், அவர்களின் காவலை வரும் 16ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்….

Related posts

மெரினா சாலையில் லாரி மோதி மாநில கல்லூரி மாணவி பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குபதிவு!

கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி பறப்பதை உறுதி செய்ய ஆட்சியருக்கு உத்தரவு