அரசு துவக்க பள்ளியில் டிஜிட்டல் திரையில் பள்ளி பாடம்

தொண்டி, ஜூன் 28: நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் டிஜிட்டல் திரையில் பாடம் நடத்தியதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொண்டி அருகே நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு வேல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் டிஜிட்டல் திரை வழங்கப்பட்டது. இத்திரையில் இன்டர் நெட் மூலம் பாடம் நடத்தப்பட்டது.

மேலும் குழந்தைகளுக்கான படமும் காட்டப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ் கூறியது, திரையில் பாடம் நடத்துவது மாணவர்களுக்கு புரிந்து கொள்ளும் திறனை எளிமை படுத்துகிறது. ஒரு வகுப்பிற்கு ஒரு மணி நேரம் என தினமும் அனைத்து வகுப்பிற்கும் இந்த பாடம் நடத்தப்படுகிறது. மாணவர்களின் மனதும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை