அரசு சிறப்பு பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் அரசு சிறப்பு பள்ளிகளான பார்வைத்திறன் குறையுடையோருக்கான தொடக்கப் பள்ளி மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியுடன் முற்றிலும் தற்காலிகமாகவும், மதிப்பூதியம் அடிப்படையிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள குழுவின் மூலம் நிரப்பிடும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன், தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையயோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலக அஞ்சல், தர்மபுரி -636705 என்ற முகவரியில் வரும் 2ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி