அரசு சார்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு லஞ்சம்!: பாஜக எம்.பி. குற்றச்சாட்டால் எடியூரப்பா அரசுக்கு நெருக்கடி..!!

பெங்களூரு: பெங்களூரு அரசு சார்பில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்குவதில் ஊழல் நடந்துள்ளதாக ஆளும் பாஜக அரசின் எம்.பி.யே குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு தரகர்களை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா, கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் இடம் அளிப்பதில் பெரும் ஊழல் நடந்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். 
இதுகுறித்து பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். அரசு சார்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற கள்ளச்சந்தையில் 3 நபர்களுக்கு விற்கப்பட்டு உள்ளதற்கு ஆதாரம் உள்ளதாக அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனிடையே நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க பணம் வாங்கியதாக ஒரு பெண் உட்பட 2 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 
இருவரும் 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு படுக்கை வசதிகளை செய்துகொடுத்தது தெரியவந்தது. இதற்கு பெங்களூரு மாநகராட்சியில் பணிபுரியும் பல ஊழியர்கள் உதவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் கமல் பண்ட் தெரிவித்துள்ளார்.  

Related posts

சட்டீஸ்கரில் நக்சல் கண்ணி வெடியில் சிக்கி 5 போலீசார் காயம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம்