அரசு கல்லூரியில் பயிற்சி வகுப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 13: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் நிறைவு விழா மற்றும் “மேகக் கணிமையில் எதிர்கால போக்குகள்” பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பிற்கு முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கனடா இணையம் ஒருங்கிணைந்த நிறுவனம் இயக்குனர் சந்தானம் சிவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மேகக் கணிமையில் எதிர்கால போக்குகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பினை விளக்கினார். மேலும், மாணவர்களுக்கு மேகக் கணிமையில் இருக்கும் புதிய வாய்ப்புகள், சவால்கள் மற்றும் சான்றிதழ் படிப்பு தொடர்பான தகவல்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்வினை கணினி அறிவியல் துறைத்தலைவர் சங்கீதா ஒருங்கிணைத்தார். உதவி பேராசிரியர் அருண் நேரு, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி