அரசு கலை கல்லூரியில் புதிய ஆய்வக கட்டிடம்

 

சேந்தமங்கலம், ஜூலை 17: சேந்தமங்கலம் அரசு கலை கல்லூரியில், புதிய ஆய்வக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சேந்தமங்கலம் வெட்டுக்காடு அரசு கலைக்கல்லூரியில் 2022-23 ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக கட்டப்பட்ட 8ஆய்வக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கல்லூரியில் இதன் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்வர் பாரதி தலைமை வகித்தார்.

தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி வைத்து புதிய ஆய்வகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் கணித துறை தலைவர் செந்தில்குமரன், தமிழ் துறை தலைவர் கலையரசி, ஆங்கிலத் துறை தலைவர், சத்யராஜ், தாவரவியல் துறை தலைவர் ராஜசேகர், கணினி அறிவியல் துறை தலைவர் பிரதாப் சக்கரவர்த்தி, வணிகவியல் துறை தலைவர் ராமநாதன், உடற்கல்வித்துறை தலைவர் ரவி உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி