அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வை எதிர்த்த மனு தள்ளுபடி

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘‘‘தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு ெபறும் வயதை 60 ஆக உயர்த்தி கடந்த பிப். 25ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும். போதிய வேலை வாய்ப்பின்றி இளைஞர்கள் வறுமையில் தள்ளப்படுவர். எனவே, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், அரசின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரத்தில் தலையிட வேண்டியதில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்