அரசு ஊழியர்களாக்க வேண்டும் அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கை

 

மதுரை, செப். 13: தங்களை அரசு ஊழியர்களாக நியமித்து குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அவர்கள் தரப்பில் அவர்கள் தரப்பில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு ரூ.26 ஆயிரம் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று மையங்களில் பணியாற்றும் சூழல் இருப்பதால், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related posts

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு

வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அரசு ஊழியர் ரூ.10 லட்சம் நூதன மோசடி: போலீசார் வழக்குப்பதிவு