அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கவில்லை; பலமுறை புகார் அளித்தும் பயனில்லை: பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

கோவை: கோவையை அடுத்த செலம்பநல்லூர் பகுதியில் 8 அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை தொண்டாமுத்தூர், நரசிபுரம், தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் இந்த அரசு பேருந்தில் தான் சென்று வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக இங்கு இருக்கும் பேருந்துகள் முறையான நேரத்தில் இயக்கப்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் போக்குவரத்து மேலாளரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டினர். இதனால் அந்த பகுதியில் 8 அரசு பேருந்துகளை பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் கூறினார்கள். இந்த பகுதியில் 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பேருந்துகள் வருவதாகவும் அதன் பின்னர் பேருந்துகள் வரவில்லை எனவும், அதனால் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்….

Related posts

கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை..!!

கோவையில் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு..!!

நாளை ஆடிப்பெருக்கு தினத்தில் படித்துறை இல்லாத காவிரி, கொள்ளிடம் கரையோரத்தில் நீராடத் தடை: திருச்சி ஆட்சியர்