அரசியலை விட்டு கமல்ஹாசன் விலகலா?..மநீம அறிக்கை

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அரசியலை விட்டு விலகுவதாக வெளியான தகவல்கள் குறித்து நேற்று மநீம துணை தலைவர் ஏ.ஜி.மவுரியா வெளியிட்ட அறிக்கை: கொரோனா காரணமாக மநீம தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, `தீவிர அரசியலில் இருந்து கமல் ஓய்வுபெற முடிவு’, `கமல் கட்சிக்கு கிளைமாக்ஸ்’ என்பது போன்ற தகவல்கள் வெளியானது. கமல்ஹாசன் தான் உயிரோடு இருக்கும்வரை அரசியலிலும், அரசியல் இருக்கும்வரை மநீம இருக்கும் என்பதை ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கட்சி தொடங்கியபோது, தன் வாழ்நாள் முழுவதும் அரசியலில் சேவையாற்றிடுவேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் வகுத்த அந்த கொள்கையின்படி இப்போதும் செயல்பட்டு வருகிறார். அவர் எந்த சூழ்நிலையிலும் அரசியலை விட்டு விலக நினைத்தது இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்