அரசால் தடைசெய்யப்பட குட்கா விற்றவர் கைது

திருவாரூர், செப்.27: திருவாரூரில் ஐந்தரை கிலோ அளவில் குட்கா பொருட்களை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலீப், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் நகரில் நேற்று இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது விஜயபுரம் பகுதியில் கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ், கூலீப் உள்ளிட்ட பொருட்கள் ஐந்தரை கிலோ இருந்தது கண்டுபிடிக்கபட்டு அதனை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடை விற்பனையாளர் நாராயணசிங் (62) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதேபோன்று மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது