அம்மன் கோயிலில் ₹2.5 லட்சம் நகை, பணம் கொள்ளை

விருத்தாசலம், ஜூலை 8: நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் விருத்தாசலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் வந்து குருவாயூர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் ரயில்வே இருப்பு பாதை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். சிதம்பரம்: சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் தில்லை மக்கீன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜாசம்பத்குமார், நகர செயல் தலைவர் தில்லை குமார், துணை செயலாளர் சின்ராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சம்பந்தமூர்த்தி, சண்முகசுந்தரம், நாராயணசாமி, குமராட்சி ரங்கநாதன், தில்லை செல்வி, ஜனகம், மாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது

குன்றத்து மலை மீது சோலார் மின் விளக்கு

மேலூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்