அமைதியும் தெரியும் அடி தரவும் தெரியும்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

கிமின்: “இந்தியா உலக அமைதிக்கான குரு. அதே நேரம், எல்லை அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறமை அதற்கு உண்டு,’’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நாட்டின் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளி்ல சுமார் 60 ஆயிரம் கிமீ தூரத்துக்கு சாலைகள், 56 ஆயிரம் கிமீ தூரத்துக்கு பாலங்கள், 19 விமான தளங்கள், 4 சுரங்கப் பாதைகள் ஆகியவற்றை எல்லை சாலை அமைப்பு அமைத்துள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலம் லக்மிபூர் மாவட்டத்தில் காணொலி மூலம் நடந்த விழாவில், அருணாச்சலில் எல்லை சாலை அமைப்பினரால் 20 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட, கிமின்-போடின் சாலை உள்பட 12 எல்லை சாலைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய அவர், “எல்லையில் சாலைகள் அமைப்பதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு நுழைவு வாயிலாக இருப்பதுடன், கிழக்கு ஆசிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது. இந்த சாலைகள் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சர்வதேச எல்லைகளில் ராணுவப் படையினர் மிக வேகமாக செல்லவும் பயன்படும். உலக அமைதிக்கான குருவாக இந்தியா இருக்கிறது. இருப்பினும், எல்லை அத்துமீறல்களுக்கு, உரிய பதிலடி கொடுக்கவும் அதற்கு தெரியும். நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அதற்கான விளைவை அவர்கள் சந்திக்க நேரிடும்,’’ என்றார்….

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்