அமைச்சர் வருகையையொட்டி பிரிட்டிஷ் துணை தூதர் பிச்சாவரத்தில் ஆய்வு

 

புவனகிரி, ஜூலை 24: உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுரபுன்னை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த மரங்கள் காடுகளாக வளர்ந்து காணப்படுகிறது. இதில் படகு சவாரியும் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டிஷ் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரசா கபே வரும் 29ம் தேதி பிச்சாவரத்திற்கு வருகை தருகிறார். இதையொட்டி முன்னதாக பிரிட்டிஷ் நாட்டின் துணை தூதர் ஆலிவர், வனத்துறை அதிகாரிகளுடன் பிச்சாவரம் வனப்பகுதிக்குள் படகில் சென்று ஆய்வு செய்தார்.

பிச்சாவரத்திற்கு வந்த துணை தூதர் ஆலிவர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், கிள்ளை பேரூராட்சி துணை தலைவர் கிள்ளை ரவிந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் படகில் பிச்சாவரம் காட்டுப்பகுதிக்கு சென்றார். அங்கு 29ம் தேதி பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வரும்போது எந்த இடங்களை பார்வையிட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி