அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 6 இடங்களில் குழந்தைகளுக்கான அவசரகால சிகிச்சை பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த வாரம் கனமழையின்போது ஒரே நாளில் 68 குழந்தைகள் பிறந்தன. இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளை பார்த்து பரிசுப் பொருட்களை வழங்கினார். மேலும், சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்டி விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அரசு மருத்துவமனைகளில் 65 சதவீதம் சுகப்பிரசவமும், தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீதம் சுகப்பிரசவமும் நடைபெறுகிறது. வெளிநாடுகளில் 80 சதவீதம் சுகப்பிரசவம் நடக்கிறது. 20 சதவீதம் மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது. முன்பெல்லாம் 100 சதவீதம் சுகப்பிரசவம் இருந்தது. தற்போது, அந்த சதவீதம் குறைந்து, சிசேரியன் சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் குழந்தையை வெளியில் எடுப்பது தான் காரணம். இதை ஊக்கப்படுத்த கூடாது என மருத்துவர்களை அறிவுறுத்தியிருக்கிறோம். சிசேரியன் தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைக்கு கடிதம் எழுத இருக்கிறோம். தமிழகத்தில் 6 இடங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசரகால சிகிச்சை பிரிவு தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை