அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் எம்பி, எம்எல்ஏக்களின் திட்டப்பணி தேர்வு குறித்த கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எம்பி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை தேர்வு செய்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம்  நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு கூட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: மக்களுக்கான திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாகவும், அவற்றை நிறைவேற்றுவதில் இரவு பகல் பாராமல் தமிழக முதலமைச்சர் உழைத்து வருகிறார். தற்போது நடைபெற்ற  மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு  இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. இதுபோன்று வரும்காலங்களில் தமிழக முதலமைச்சர் அறிவிக்கின்ற திட்டங்களையும், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களையும், முழுமையாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு அனைத்து துறை அலுவலர்களும் விருதுகளை பெறவேண்டும். மேலும் மக்களின் குறைகளை முழுமையாக கேட்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்றி தருகின்ற அரசு அலுவலர்களாக நீங்கள் பணியாற்றவேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். கூட்டத்தில், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராஜன், துரை.சந்திரசேகர், சப்.கலெக்டர் (பயிற்சி) மகாபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், செயல் அலுவலர் வ.ராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி